Published : 08,Nov 2021 07:00 AM
சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றிருந்தவர்கள் வாகனங்களில் சென்னை திரும்பியதால் சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், சொந்த வாகனங்களில் சென்னை திரும்பினர். இதனால் மதுராந்தகம் அருகேயுள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஃபாஸ்டேக் முறை இருந்தும் அது விரைந்து செயல்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.