செய்தியாளர்: காமராஜ்
விழுப்புரம் அருகேயுள்ள கிராமப்புற பகுதிகளான சிறுவாலை கெடார், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் மூலமாக அரசு கலைக்கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்லுபவர் தனியார் பேருந்தில் பயணிக்கும் போது அதிகபடியான கூட்டம் இருந்தால் பேருந்து படிக்கட்டு மற்றும் பேருந்தின் பின்புறமுள்ள ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் தனியார் பேருந்துவில் கல்லூரி மாணவர்கள் படி மற்றும் பேருந்துவின் பின்புற கம்பியில் தொங்கியவாறு பயணிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கில் பரவி வருகிறது. பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்க வேண்டாமென பலமுறை காவல் துறையினர் எச்சரித்தும் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இய்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.