விசிக விழாவில் சத்யராஜ் பேச்சு
விசிக விழாவில் சத்யராஜ் பேச்சுமுகநூல்

’முருகன் விழா நடத்தி ஏமாற்றலாம் என்று நினைக்காதீர்கள்..’ - விசிக விழாவில் சத்யராஜ் பேச்சு!

கடவுள் முன்பு உண்டியல் வைப்பது ஆத்திகம். அந்த உண்டியலுக்கு பூட்டு போட்டது நாத்திகம்.. பெரியார் கோயிலுக்கு சென்று போது பூசாரி உள்ளே இருப்பது வெண்கலமா? என்ன கேட்ட பொழுது அதனை கல் என்று பூசாரி சொன்னதாக கூறினார். - சத்யராஜ்
Published on

செய்தியாளர் சுரேஷ்குமார் 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அம்பேத்கர் சுடர் விருது முன்னாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம், மார்க்ஸ் மாமணி விருது தமிழ்தேசிய விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பெரியார் ஒளி விருது நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

அதில் பேசிய நடிகர் சத்தியராஜ், “ எனக்கு இன்று ஒரு குறை நீங்கி விட்டது. திருமாவளவனிடம் எதையாவது பெற வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இன்று 50,000 ரூபாய் செக்கை பெற்றுள்ளேன். பெரியார் அவர்கள் 90 ஆண்டுகள் கையில் அணிந்திருந்த மோதிரம் என்னிடம் உள்ளது. அந்த மோதிரத்தை ஆசிரியர் வீரமணி அவர்கள் கருணாநிதி அவர்கள் கைகளால் கொடுத்து எனக்கு அனுபவிக்கச் செய்தார்.அதேபோல எம்ஜிஆர் இடம் இங்கிருந்து உடற்பயிற்சி செய்யக்கூடிய கர்லாக்கட்டையை பெற்றுள்ளேன். இந்த விருதுடன் வழங்கப்பட்ட 50,000 ரூபாய் காசோலை பணமாக எடுத்து 49, 500 ரூபாயை விடுதலை சிறுத்தைகள் கட்சியிடமே கொடுத்து விடுகிறேன். அதனை மாணவிகளுக்கு கல்விக்காக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

500 ரூபாயை மட்டும் பிரேம் போட்டு வீட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொள்வேன். இங்கு இருப்பவர்கள் கடவுள் குறித்து பேச சொல்கிறார்கள். கடவுள் ஒழிப்பு முக்கியம் இல்லை.. ஜாதி ஒழிப்பு தான் முக்கியம். ஜாதி ஒழிப்பே தமிழ் தேசியத்தின் அடிப்படை.. ஜாதி காரணமாக தமிழன்தான் தமிழனை வெட்டுகிறேன்.. ஜாதி ஒழிப்பே தமிழ் தேசியமாக இருக்கும்.ஜாதியை வைத்து அடங்கு என்றால்.. அடங்க மறுக்க வேண்டும்.

விசிக விழாவில் சத்யராஜ் பேச்சு
”நான் சாகவில்லை; உயிரோடுதான் இருக்கிறேன்” - அன்புமணியை மறைமுகமாக விமர்சித்த பாமக எம்.எல்.ஏ!
ஜாதி ஒழிப்பே தமிழ் தேசியத்தின் அடிப்படை.. ஜாதி காரணமாக தமிழன்தான் தமிழனை வெட்டுகிறேன்.. ஜாதி ஒழிப்பே தமிழ் தேசியமாக இருக்கும்.ஜாதியை வைத்து அடங்கு என்றால்.. அடங்க மறுக்க வேண்டும்.

பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்டுக்களை இணைத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி.. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திருமாவளவன் குறித்து புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். திருமாவளவன் வாழும் அம்பேத்கர். விபி சிங் படத்தை திறந்து வைக்கும் வைப்பு.. பிரபாகரன் படத்தை திறந்து வைக்கும் வைப்பை ஏற்கனவே எனக்கு திருமாவளவன் கொடுத்தார். அதன் பிறகு தற்போது இந்த வாய்ப்பும் கிடைத்துள்ளது.

கடவுள் குறித்து பேசுவது என்ன என்றால் பெரியார் ஆத்திகம் நாத்திகம் குறித்து பேசியதை தான் சொல்கிறேன். கடவுள் முன்பு உண்டியல் வைப்பது ஆத்திகம். அந்த உண்டியலுக்கு பூட்டு போட்டது நாத்திகம்.. பெரியார் கோயிலுக்கு சென்று போது பூசாரி உள்ளே இருப்பது வெண்கலமா? என்ன  கேட்ட பொழுது அதனை கல் என்று பூசாரி சொன்னதாக கூறினார். ஜாதிதான் மக்களுக்கு பிரச்சினை. ஜாதியை ஒழிக்க தடுக்கும் கடவுள் கற்பனையை பெரியார் எதிர்த்தார்.. கடவுளை வைத்து தமிழ்நாட்டில் எந்த வித்தையையும் காட்ட முடியாது. எங்களை ஏமாற்றுவதாக நினைத்து நீங்கள் ஏமாறாதீர்கள். முருகன் விழா நடத்தி ஏமாற்றலாம் என்று நினைக்காதீர்கள். மக்கள் ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டில் பெரியாரிய சிந்தனை அம்பேத்காரிய சிந்தனைகள் உள்ளது.. வறுமையைவிட ஜாதிதான் ஒழிய வேண்டும் என்று பெரியார் கூறி இருந்தார். அது தான் வேண்டும்.” என்று சத்தியராஜ் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com