ரெட் அலார்ட் facebook
தமிழ்நாடு

’அதி கனமழை இருக்கும்’.. விழுப்புரம், கடலூர், க.குறிச்சி மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை!

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் விடுத்துள்ளது.

PT WEB

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ள நிலையில், சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் டிசம்பர் 3 ஆம் தேதி திருப்பத்தூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 7வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலார்ட் விடுத்துள்ளது.