VILLAGE FOOD FACTORY முகநூல் பக்கம் ஹேக்
VILLAGE FOOD FACTORY முகநூல் பக்கம் ஹேக் pt web
தமிழ்நாடு

Village Food Factory முகநூல் பக்கத்தில் ஆபாச படங்கள்.. என்ன ஆச்சு..?

PT WEB

VILLAGE FOOD FACTORY முகநூல் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள் பகிரப்படுவதால் அதனை பின் தொடர்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தங்களின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்படுள்ளதாக VILLAGE FOOD FACTORY தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “யாரோ சிலர் அருவருக்கத்தக்க புகைப்படங்களை எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறார்கள். எத்தனை முறை அதை நீக்கினாலும் மீண்டும் ஸ்டோரியாக பதிவிடப்படுகிறது. முகநூல் நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும், நன்றி” என்றுள்ளனர்.

டாடி ஆறுமுகத்தின் சமையல் சேனல் யூடியூபில் மிகவும் பிரபலம். தன்னுடைய எதார்த்த பேச்சாலும் சமையல் செய்யும் திறனாலும் தனக்கென ஒரு பெரும் கூட்டத்தை ஆறுமுகம் உருவாக்கியுள்ளார்.

இவரது முகநூல் பக்கத்தை 53 லட்சம் நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அப்பக்கம்தான் நேற்று யாராலோ ஹேக் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆபாச படங்கள் மற்றும் லிங்க்குகள் பகிரப்படுவதால் சேனலை பின்தொடர்பவர்கள் சற்று எரிச்சல் அடைந்துள்ளனர். விரைந்து பக்கத்தை மீட்க VILLAGE FOOD FACTORY குழுவினர் போராடி வருகின்றனர்.