விஜயதரணி web
தமிழ்நாடு

பாஜகவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் விஜயதரணி.!

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணையவிருக்கிறார்.

PT WEB

தமிழ்நாட்டின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஜயதரணி, காங்கிரஸை விட்டு 2024ல் பாஜகவில் இணைந்தார். 2011, 2016, 2021 தேர்தல்களில் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற அவர், 2026ல் பாஜக வேட்பாளராக கடும் தோல்வி கண்டார். பொறுப்புகள் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த அவர், தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார்.

விஜயதரணி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதி மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தொடங்கிய அவர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

விஜயதரணி

பின்னர் பிப்ரவரி 24, 2024 அன்று, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புது தில்லியில் உள்ள தலைமையகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) தன்னை இணைத்துகொண்டார். இந்த நிலையில் கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதே விளவங்கோடு தொகுதியில்  முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி பாரதிய ஜனதா கட்சி (BJP) சார்பில் போட்டியிட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.

இந்த நிலையில் பாஜகவில் எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை என கடும் அதிருப்தியில் இருந்த அவர், தற்போது பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணையவிருக்கிறார்.