vijay web
தமிழ்நாடு

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்.. விஜயின் மும்பை பயணம் ஏன்..? இறங்கியவுடன் விஜய் செய்த செயல்!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜயின் மும்பை பயணம் கவனம் பெற்று வருகிறது.

PT WEB

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜயின் மும்பை பயணம் கவனம் பெற்று வருகிறது.

செய்தியாளர் - விக்னேஷ்

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் அரசியலில் கால் பதித்து, வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருவது இந்தியளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

Vijay

இந்த நிலையில் தான் விஜய், தனி விமானம் மூலம் மும்பை சென்றுள்ளது அவரது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் அட்லியின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகரும், தவெக தலைவருமான விஜய் மும்பை சென்றுள்ளார்.

அப்போது விமான நிலையித்தில், விஜய்க்கு ஆரவாரத்துடன் அவரது ரசிகர்கள் வரவேற்பளித்தனர். விஜயும் சிரித்தப்படி ரசிகர்களுக்கு கை காட்டி Car-ல் ஏறி புறப்பட்டார். இது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான விஜய், அட்லியின் இயக்கத்தில் மெர்சல், தெறி, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே விஜயின் சினிமா கரியரில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வசூல் ரீதியாக மட்டுமில்லாமல், விமர்சன ரீதியாகவும் இப்படங்கள் வெற்றி பெற்றது.

அட்லீயின் எமோஷனல் டச்சும் அரசியல் வசனங்களும் இப்படத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகைக்கு இப்படங்கள் ஒரு முக்கிய அச்சராமாக கூட அமைந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

படங்களை தாண்டி விஜய் மற்றும் அட்லீ இடையே சகோதரத்துவமும் மலர்ந்தது. விஜய் மீது அதீத அன்பு வைத்துள்ள அட்லீ, அதை பல மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார். எங்க அண்ணன் என்று அட்லீ உரிமையோடு பேசியது விஜய் ரசிகர்களை ஈர்த்தது. இயக்குனர் அட்லீ Bollywood வரை சென்றாலும் விஜயுடன் இருக்கும் அந்த நல்லுறவை கடைபிடித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாகவே, அட்லீ மனைவியின் வளைகாப்பு விழாவில் பங்கேற்க விஜய் மும்பை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த விழாவில் அட்லீ - ப்ரியாவுக்கு நெருங்கிய பிரபலங்கள் சிலரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijay

அரசியலில் விஜயின் தவெக கட்சி தற்போது வரை கூட்டணியின்றி பயணித்து வருகிறது. கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் மதச்சார்பற்ற கொள்கைகளில் எந்த சமரசமும் இல்லை என்று விஜய் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கூட்டணி, CBI வழக்கு விசாரணை, ஜனநாயகன் பட சர்ச்சை, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சிக்கல் என பல்வேறு பரபரப்பான சூழலுக்கு மத்தியில் விஜயின் இந்த மும்பை பயணம் கவனம் பெற்று வருகிறது.