விஜய் X
தமிழ்நாடு

தீபாவளி கொ*லகள்; தவெக எம்.எல்.ஏ-க்கள் சர்ச்சை - முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!!

சென்னையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனை.

Premkumar S

இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (நவம்பவர் 8) களைகட்டின. இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையில் மட்டும் 11 பேர் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், தவெக அரசில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. நேற்றைய தினம், காவல்துறை தரப்பில் தீபாவளி நாளில் 8 கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாக காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்தச்சூழலில் தான், தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில், இன்று நடைபெறவிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு விவாகரம், துணை சபாநாயகர் ரவிசங்கர், புகாரளிக்க வந்தவரை தாக்கியது தொடர்பான குற்றச்சாட்டு. தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கு இந்தக் கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்தச்சூழலில் தான், முதல்வர் தலைமையிலான தவெக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.