”தீபாவளி நாளில் 8 கொ*லகள் மட்டுமே நடந்துள்ளது” - கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு காவல்துறை விளக்கம்!
இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் நேற்றைய முன் தினம் (நவம்பவர் 8) களைகட்டின. இதற்கிடையில், அந்நாளின் கொண்டாட்டங்களுக்கு இடையில் மட்டும், சிறார்கள் உட்பட தமிழகத்தில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் எதிர்க்கட்சிகள் நேற்று முதல் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்தச்சூழலில் தான், தீபாவளி நாளில் 8 கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாக தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளின் தீபாவளி நாட்களில் நடந்த கொலைகளின் தரவுகளையும் வெளியிட்டிருக்கிறது.
அதில், 2022-ம் ஆண்டு தீபாவளியில் 9 கொலைகளும், 2023-ல் 4 கொலைகளும், 2024-ம் ஆண்டில் 10 கொலைகளும், 2025-ம் ஆண்டில் 6 கொலைகளும், இந்தாண்டு 8 கொலை சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பதிவான கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2022 -ம் ஆண்டு 1,370 கொலைகளும், 2023–ம் ஆண்டு 1,347 கொலைகளும், 2024-ம் ஆண்டு 1,289 கொலைகளும், 2025-ம் ஆண்டு 1,232 கொலைகளும், 2026–ம் ஆண்டு 1,267 கொலைகளும் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு வரை கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது. ஆனால், 2026ஆம் ஆண்டில் 2025ஆம் ஆண்டைக் காட்டிலும் 35 கொலைகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

