விஜய், திருமாவளவன் pt web
தமிழ்நாடு

"விஜய் பெயரை வைத்து தமிழ்நாட்டில் சூதாட்டம்” - திருமாவளவன் குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் பெயரை வைத்து தமிழ்நாட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வரும் மே 4ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு வெளியாகவிருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக 3 கட்சிகளுக்கும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தலைமைச் செயலகம்

ஆளும் கட்சியான திமுக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மிகப்பெரிய அளவிலான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. எனினும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து பேசி வந்ததாலும், சிபிஎம் மற்றும் சிபிஐ போன்ற கட்சி 6 தொகுதிகளை கேட்டு வந்த நிலையில், 5 தொகுதிகளையே தர முன்வந்திருந்தது திமுக. அதேபோல, விசிகவுக்கு 8 தொகுதிகளையே ஒதுக்கியிருந்ததும் அக்கட்சியினர் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு நீண்ட இழுபறிக்குப் பிறகு தான், இந்தக் கூட்டணி இறுதியாகியிருந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து =முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் இந்தசூழலில் தான், சில திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசிவரும் கருத்துக்கள் திமுக கூட்டணித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்பட்டது. இந்தசூழலில் தான், நேற்றைய முன்தினம் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த காணொளியில், திமுக ஆட்சியை கைப்பற்றப்போகிறது என்று சொன்னால் அதற்கு விசிகவின் அணுகுமுறையும், உறுதியான நிலைப்பாடும் காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. நாம் கூடுதல் இடங்களுக்கு ஆசைப்பட்டிருந்தால், மாற்றம் என்கிற பெயரில் நாம் வேறு முடிவை எடுத்திருந்தால் தமிழ்நாடு அரசியல் தலைகீழாக மாறியிருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது” எனப் பேசியிருந்தார். அதேபோல,  கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைக்காத விசிகவினர் குறித்தும் தகவல்கள் திரட்டப்படுகிறது எனத் தனது கட்சியினர் குறித்தே குற்றஞ்சாட்டியிருந்ததும் பேசுபொருளாகியிருந்தது.

திருமாவளவன்

இந்தசூழலில் தான், இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவனிடம், தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்ப்ய கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து இருக்கிறார்கள். எனவே வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு திமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றார். அதேபோல் சில தொகுதியில் விசிக நிர்வாகிகள் தேர்தல் பணி செய்யவில்லை என பேசியது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், கட்சி நிர்வாகிகளை நெறிப்படுத்த விசிக நிர்வாகிகள் சில தொகுதியில் வேலை செய்யாமல் இருந்ததை முகநூல் நேரலையில் பேசி இருந்தேன். இது முழுக்க  உட்கட்சியில் நிர்வாகிகளை சரிபடுத்து வேண்டியது. எனவே அந்த கோணத்தில் அடிப்படையில் பேசப்பட்டது மட்டுமே என விளக்கம் அளித்தார்.

திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் முடிவுகள் வெளியிட்டிருக்கும் நிலையில், ஒரே ஒரு கருத்துக் கணிப்பு மட்டும் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து, திருமாவளவன் பேசுகையில், ”இந்த தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய் பெயரில் சூதாட்டம் நடக்கிறது. வாக்குப்பதிவு பின்பும் இதுபோன்று நடந்து வருவருகிறது. அதன் ஒரு வெளிபாடே ஒரே ஒரு ஊடகம் மட்டும், விஜய் வெற்றி பெறுவார் எனத் தெரிவித்திருப்பது. மேலும், அந்த ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் இயங்கக் கூடியவை.

கடந்த காலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் வருகை போது சமூகவலைதளம் அதிகம் இல்லை. அதேபோல் திமுக, அதிமுகவுக்கு மாற்று என பேசுவது கடந்த காலத்திலும் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் தான்  சமூகவலைதளத்தில் பெரும்  பிம்பமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.