பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் அடுத்தடுத்த நாள் தமிழக வருகை, அரசியல் களத்தை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்று தமிழ்நாடு வந்த ராகுல்காந்தி முதல்வர் விஜயை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். தொடர்ந்து, இருவரும் ஒன்றாக கஃபே சென்று உரையாடினர். முன்னதாக, பிரதமர் வேட்பாளர் யார் என்பதில், கூட்டணியுள்ள காங்கிரஸ் மற்றும் தவெக இடையே மனக் கசப்பு இருந்து வந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே, ஆகஸ்ட் மாதம் ராகுல்காந்தி சென்னை வந்தபோதும், முதல்வர் விஜயை சந்திக்கவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்தச்சூழலில் தான், நேற்றைய ராகுல் விஜய் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், இன்றைய தினம் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி வடபழனி இடையிலான வழித்தடத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதற்காக இன்று தமிழகம் வருகிறார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், முதல்வர் விஜயும் கலந்துகொள்ளவிருக்கிறார். தொடர்ந்து, இருவரும் மெட்ரோவில் ஒன்றாக பயணிக்கவிருக்கின்றனர்.
இவ்வாறு, பிரதமர் மோடி மற்றும் ராகுலின் அடுத்தடுத்த நாள் தமிழக வருகையும், இருவருடனான முதல்வர் விஜயின் சந்திப்பும் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.