செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
குற்றப் பத்திரிக்கைக்கு எதிராக வேங்கைவயல் கிராம மக்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் என அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் மூன்று பேரை நேற்று சிபிசிஐடி போலீசார் தமிழக அரசு வழக்கறிஞர் மூலம் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த கிராமத்திற்குள்ளும் வெளியேவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் கிராமத்திற்குள் வராதபடியும் போராட்டத்தை வீடியோ எடுத்து அனுப்பி விடாத படியும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.