அரியலூர் நிகழ்வு புதிய தலைமுறை
தமிழ்நாடு

அரியலூர் | ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

PT WEB

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜெயங்கொண்டம் இணைந்து நடத்திய, ‘புதிய தலைமுறை’யின் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சி.சுவாமி முத்தழகன் மற்றும் பள்ளி முதல்வர் R.கீதா தொடங்கிவைத்தனர்.

இந்த நிகழ்வில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி அசத்தினர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

நிலச்சரிவுகளை முன்கூட்டியே அறியும் கருவிகள், முதியோருக்கு உதவும் சென்சார் பொருந்திய கருவிகள் உட்பட பல்வேறு படைப்புகள் இடம்பெற்றன. அறிவியல் கண்காட்சியில் முதுநிலை பிரிவில் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் B.A.அபர்ணாதேவி மற்றும் K.ஜெயஶ்ரீ ஆகியோர் முதல் பரிசினை வென்றனர்.

இளநிலை பிரிவில் ஜெயங்கொண்டம் சவுடாம்பிகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் M.தர்சன் மற்றும் R.K.நிதிஷ் ஆகியோர் முதல் பரிசினை வென்றனர். முதல் பரிசினை தட்டிச் சென்றவர்களுக்கு நினைவுக் கோப்பைகளும், பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை | “முதல்வர் மீது நம்பிக்கை இல்லை” - குற்றஞ்சாட்டும் பெற்றோர்!