விழுப்புரம் மாவட்டம் ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் புதிய தலைமுறை இணைந்து வழங்கும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை கடந்த 3ம் தேதி பள்ளியின் செயலாளர் திரு P.K. ஜனார்த்தனன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர்கள் திருமதி. B.சுமதி, திருமதி. S. மகாலட்சுமி உடன் இருந்தனர்
புதிய தலைமுறை, வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் மற்றும் ஜெயேந்திர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்கள் சிந்தனையில் உதித்த புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் விழாவை அலங்கரித்தனர்.
விழுப்புரம் ஆட்சியர் டாக்டர் சி. பழனி கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார். உடன் பள்ளியின் தாளாளர் J.பிரகாஷ் அவர்கள், செயலாளர் P.K. ஜனார்த்தனன், பள்ளிக் குழும உறுப்பினர்கள், பள்ளியின் முதல்வர்கள் திருமதி B.சுமதி, திருமதி S. மகாலட்சுமி, துணை முதல்வர் திருமதி U.கௌதமி மற்றும் விளையாட்டு துறை தலைவர் T. தமிழ்மணி உடன் இருந்தனர்.
அதன் பின்னர் அன்று மாலை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி அவர்கள் பள்ளியின் தாளாளர் J.பிரகாஷ் அவர்கள், செயலாளர் P.K. ஜனார்த்தனன் அவர்கள் பள்ளிக் குழும உறுப்பினர்களால் நினைவுக் கோப்பைகளும், பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இளநிலை பிரிவில் Sacred Heart Central School மாணவன் M.Vishal Anand முதல் பரிசினை வென்றார். முதுநிலை பிரிவில் நாகர் பப்ளிக் பள்ளி மாணவன் K. Dhaneshwaran முதல் பரிசினை வென்றார்.