விஜய் ரசிகர்களை விமர்சித்த வீரலட்சுமி web
தமிழ்நாடு

”விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்..” - ஆவேசமாக பேசிய வீரலட்சுமி

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள் என தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளார்.

PT WEB

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள், காதலிக்காதீர்கள் என தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி ஆவேசமாக பேசியுள்ளார்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெறுவதற்கு தடையாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார்.

தவறான செய்திகளை பரப்புகிறார்கள்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் தனிமனிதரால் 41 உயிர்கள் போயிருப்பதாகவும், இதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்காத வகையில் சிலர் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.

கரூர் தவெக பரப்புரை

ஹரி நாடார், சவுக்கு சங்கர், நேதாஜி மக்கள் கட்சி வரதராஜன் ஆகிய மூன்று நபர்களும் தொடர்ச்சியாக அடிப்படை ஆதாரம் இல்லாமலும், நீதித்துறையை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், இவர்கள் மூன்று நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் பணம் வாங்கிவிட்டு இழிவாக பேசி வருவதாகவும், ஏழை எளிய மக்கள் நினைத்ததை பேசிய நீதிபதியை அவதூறாக வரதராஜன் என்பவர் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்கள் மூன்று நபர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள்..

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு காரணமாக இருந்த தவெக மாவட்டச் செயலாளர் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தேடி வருகின்றனர், நடிகர் விஜய் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால் குழந்தை உட்பட மரணித்தவர்களுக்கு காரணமாக இருந்த நபர்களுக்கு தமிழக மக்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும். விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்க வேண்டாம், பெண் எடுக்காதீர்கள். காதலிக்காதீங்க, பொண்ணு கொடுக்க வேண்டாம். அது தான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுத்தால் சிகரெட் பிடிப்பது, உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபடுவார்கள்.

வீரலட்சுமி

ஹேமமாலினி கரூருக்கு வந்தார்? அவர் யார் அவருக்கு நம்முடைய மொழி புரியுமா? மொழியே புரியாத அவருக்கு நம் வலி எப்படி புரியும் என கேள்வி எழுப்பினார்.

பாஜகவினர் எண்ணெயை ஊற்றி தமிழக மண்ணில் பிரண்டால் கூட மண் ஒட்டாது? மண்ணே ஒட்டாத தமிழ் நாட்டில் எங்கள் மக்களுக்கு எப்படி ஒட்டும் என ஆவேசமாக பேசினார்.