செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியுசிகரனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பவரது மனைவி அங்கம்மாள், இவருக்கு 101 வயது ஆகும் நிலையில், முனிசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 6 பெண்கள் என 9 குழந்தைகள் உள்ள நிலையில், அங்கம்மாளுக்கு 10 பேரன் பேத்திகளும், 12 கொள்ளு பேரன் பேத்திகளும் உள்ளனர்.
இந்நிலையில், அங்கம்மாளுக்கு இன்று 101 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து அவரக்கு 10 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து கிரீடம் வைத்து அவர்களது பூர்வீக வீட்டில் கேக் வெட்டி அங்கம்மாளின் பிறந்தாளை உற்சாகமாக கொண்டாடினர்.