சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்pt web

சிதம்பரம் | கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. அரசின் இந்த உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.

அதனடிப்படையில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு தீட்சிதர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
ராமநாதபுரம் | மீனவர்களின் வலையில் சிக்கிய கூறல் மீன்கள் -ரூ.1.27 லட்சத்திற்கு ஏலம் போனதால் மகிழ்ச்சி

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோபி, வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

ptweb
சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
ஈஷா யோகா மையத்தில் என்ன நடக்கிறது?...வீடியோ வெளியிட்ட யூடியூபர்; நீக்க சொன்ன நீதிமன்றம்!

இதேபோல் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண் பக்தரை, சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக, தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட எட்டு பேர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தீட்சிதர்கள் கவுரி சங்கர் உள்ளிட்ட எட்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கையும் நீதிபதி ரத்து செய்ய முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com