தோல் தொழிற்சாலை இயந்திரம் விழுந்து விபத்து pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி | தோல் தொழிற்சாலை இயந்திரம் விழுந்து விபத்து - கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலை இயந்திரத்தை லாரியில் ஏற்ற முயன்ற போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களை புதுப்பிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இந்த தொழிற்சாலையில் புதுப்பிக்கப்பட்ட ராட்சத இயந்திரத்தை கிரேன் மூலம் வடமாநிலத்தில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்ப லாரியில் ஏற்ற முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக கிரேன் பெல்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதில், கீழே நின்றிருந்த கூலித் தொழிலாளி ஜெய்சங்கர் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருடன் பணியாற்றும் தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிரேன் இயந்திரத்தில் இருந்து பெல்ட் அறுந்து ராட்சத இயந்திரம் விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.