பாலியல் தொல்லை web
தமிழ்நாடு

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தவெக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது!

மதுரை அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக தொண்டர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Rishan Vengai

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மதுரை அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு தவெக தொண்டர் கண்ணன் நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவியின் அலறலை கேட்ட பெற்றோர் அவரை பிடித்து காவல்துறைக்கு ஒப்படைக்க, மகளிர் காவல் துறை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை சார்ந்த குற்றங்கள் அதிகமாக வெளிப்பட்டும் வரும் நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வி அதிகமாக எழுப்பப்பட்டு வருகிறது. கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விழுப்புரத்தில் 11 வயது சிறுமி வன்கொடுமை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை

இந்தசூழலில் மதுரையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற தவெக தொண்டர், 10-ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் ஓடி வந்து, கண்ணனை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து மகளிர் காவல் துறையினர், கண்ணனை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.