தவெக மதுரை மாநாடு நாளை நடைபெறுகிறது. (ஆகஸ்ட் 21 ஆம் தேதி ) இந்நிலையில் நாளை மழை பெய்யுமா..பெய்யாதா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (ஆகஸ்ட் 21ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு வேலைகள் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரையில் தவெக மாநாடு தினத்தன்று மழை பெய்யுமா என்ற அச்சம் ஏற்பாட்டாளர்கள் இடையே உள்ளது.
இந்நிலையில் இது குறித்து வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கூறுகையில், “ மதுரை மாவட்டத்தில் நாளை, பகல் நேரத்தில் வெப்பமான சூழல் நிலவும். பகல் நேர வெப்பநிலை அதிகபட்ச வெப்பநிலையாக 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவிற்கு பதிவாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் நண்பகல் 12 மணி முதல் மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
அதேபோல் ,”மாலை இரவு நேரங்களில் வளிமண்டலத்தில் காற்றின் வேகம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு 7 மணி அளவில் மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகளும் உள்ளது. இந்தச் சூழலில் மதுரையில் தவெக மாநாடு நடப்பது பெருந்திடல் பகுதி. அங்கு அதிகமான கூட்டம் கூடும்போது அதிகமான வெப்பநிலையை உணர முடியும்.. இவை இயல்பை விட அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் அளவிற்குப் பதிவாகும் . வெப்பநிலை அந்தப் பகுதிகளில் அதிகப்படியான கூட்டத்தின் காரணமாக 43 முதல் 44 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறினார். மேலும், பகல் நேரத்தில் மதியம் 12 மணி முதல் மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்” என்றார்.
அத்துடன், ”இரவு 7 மணி அளவில் இடி ,மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால் அதேபோல், தவெக மாநாட்டிற்கு செல்பவர்கள் அதிகப்படியான நீரை அருந்துவது அவசியம். காரணம் நீர்ச் சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக அதிகப்படியான நீரை அருந்துவதால் அவசியம்” என்று கூறினார்.
அத்துடன் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக மாநாட்டிற்குச் செல்பவர்கள் குடைகளுடன் செல்வது நல்லது. குறிப்பாகக் கருப்பு நிறக் குடைகளை தவிர்ப்பது நல்லது, ஏனென்றால் கருப்பு நிற குடைகள் பகல் நேரத்தில் அடிக்கும் வெயில் வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உடையது. இதனால் மற்ற நிறக் குடைகளை எடுத்துச் செல்வது நல்லது” என்றும் கூறினார்.