TVK leader Vijay respect Periyar  pt
தமிழ்நாடு

“சமத்துவம் மலர பாடுபட்டவர் பெரியார்..” தவெக தலைவர் விஜய் மரியாதை!

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பெரியாரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் தவெக தலைவர் விஜய்.

Rishan Vengai

தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தந்தை பெரியார்

அந்தவகையில் தவெக தலைவர் விஜய், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பெரியாரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்துள்ளார்.

பெரியாருக்கு மரியாதை செய்த தவெக விஜய்..

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் பெரியாரின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்திய விஜய், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவம் மலர பாடுபட்டவர் பெரியார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.