விஜய் PTI
தமிழ்நாடு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தவெக - முதல்வர் விஜய் மகிழ்ச்சி!!

தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நிகழ்த்திய தீர்ப்பின் தொடர்ச்சியாக, தவெகவை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்திருப்பதை முதல்வர் விஜய் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.

PT WEB

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தவெகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதற்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக்கொண்டு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தவெக தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை நிறுவிக்காட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை மக்கள் நிகழ்த்திக்காட்டிய நிலையில், அதன் வெளிப்பாடாக, இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய விசில் சின்னமும் தவெகவின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையுடன் ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.