இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி | இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்

சாத்தான்குளத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்த 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாங்குடியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகன் சந்துரு (20). கொத்தனார் வேலை செய்து வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து பின்னர் குடும்பத்தினர் அனுமதியுடன் திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே அந்தப் பெண் அவரை விட்டு பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு சாத்தான்குளம் பகுதியில் உள்ள அண்ணா நகரில் வேலை செய்ததற்கான சம்பளத்தை வாங்க அதே பகுதியைச் சேர்ந்த பேச்சி என்பவரது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்துருவை பயங்கர ஆயுதங்களுடன் வெட்ட முயன்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்துரு, பயத்துடன் மக்கள் வசிக்கும் அண்ணா நகர் பகுதிக்குள் வேகமாக ஓடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பேச்சியின் வீட்டிற்குள் புகுந்தார். இதையடுத்து அந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம கும்பல் சந்துருவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் மற்றும் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.