செய்தியாளர்: நாசர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்...
தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை கூப்பிட்டு எல்டிடிஇ அமைப்பு பயிற்சி கொடுப்பதற்கு அவசியம் என்ன? என்று கேள்வியை எழுப்பிய டிடிவி தினகரன், பிரபாகரன் பெயரை பயன்படுத்தி போலித் தனமான நடவடிக்கைகளில் சீமான் ஈடுபட்டு வருகிறார். பெரியார் போன்ற பெரும் தலைவர்களை சீமான் விமர்சனம் செய்வது நல்லதல்ல.
கனிம வள கொள்ளையை தடுக்க நேர்மையாக செயல்படும் அரசு ஊழியர்கள் தைரியமாக செயல்பட முடியவில்லை.
வேங்கை வயல் பிரச்னையில் கூட்டணிக் கட்சியினரே சந்தேகத்தை எழுப்பிய போது, மடியில் கனமில்லை என்றால் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது காட்டாச்சி போல் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது.
மத்திய அரசின் அங்கமாக செயல்படும் தமிழக ஆளுநர் தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அதனை ஆளுநருக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி மிக மோசமாக டந்து கொள்வதால் மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை.
தமிழக மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் மீன் பிடித்து வருகின்றனர். மத்திய அரசு அதற்கு ஒரு நல்ல முடிவு காண வேண்டும்.
மக்களுக்கு ஏற்றதல்ல என அரிட்டாபட்டி கனிம வள திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விட்டது. அதற்கு தமிழக அரசு உரிமை கொண்டாடுவது ஸ்டிக்கர் வெட்டி ஒட்டுவது போலதான்”
என்று டிடிவி தினகரன் பதிலளித்தார்.