பெற்றோர் கண் முன்னே சிறுவன் உயிரிழந்த சோகம் pt desk
தமிழ்நாடு

திருச்சி | இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – பெற்றோர் கண் முன்னே சிறுவன் உயிரிழந்த சோகம்

முசிறி அருகேஇருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெற்றோர் கண் முன்னே ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: சந்திரன்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் - சுரேகாஸ்ரீ தம்பதியர். இவர்களுக்கு ஸ்ரீ தவ்யன என்ற 5 வயது மகன் உள்ளார். இவர்கள் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் கோயில் திருவிழாவிற்காக மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Death

இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி நிலை தடுமாறி இடது புறமாக விழுந்த நிலையில், ஐந்து வயது சிறுவன் தவ்யன் வலது புறம் சாலையில் விழுந்துள்ளான். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். கணவன் மனைவி கண் முன்னே ஒரே மகன் உயிரிழந்தது அவ்வழியாகச் சென்ற மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த காட்டுப்புத்தூர் போலீசார், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், ஜெயபிரகாஷ் மற்றும் சுரேகாஸ்ரீ ஆகியோர் லேசான காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.