trichy death issue PT
தமிழ்நாடு

திருச்சி | குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - மாநகராட்சி ஆணையர் விளக்கம்

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்இ 15 மாதிரிகளில் அனைத்தும் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளதாக .ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிஇ மண்டலம்-5இ வார்டு எண்-08இ பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வாhர்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு பிரியங்கா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளிட்ட சிலர் இறந்ததாக தவறான செய்தி பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பதட்டம் அடைந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இப்பகுதியில் 15 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டது. மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. இந்த மாதிரி அனைத்தும் நெகடிவ் என மாநகராட்சி ஆணையர் சரவணன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநகராட்சி உறையூர் பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகத்தை நிறுத்தப்பட்டு குளோரின் போடப்பட்டு நாளை முதல் குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.