tn it minister ptr palanivel thiagarajan spoke in tn assemblyPT
தமிழ்நாடு
“எங்களிடம் நிதியும் இல்லை; அதிகாரமும் இல்லை” - பேரவையில் அமைச்சர் பிடிஆர் வேதனை; சபாநாயகர் அறிவுரை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தன் நிலை குறித்து வேதனையுடன் பேசினார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன் “கூடலூர் தொகுதியில் டைடல் பார்க் அமைத்துத் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேதனை “எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது; மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தொழிற்பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே என் துறை வசம் உள்ளது.
PTRpt desk
டைடல் பார்க், நியோ டைடல் பார்க் போன்றவை தொழிற்துறை வசமே உள்ள அசாதாரண நிலை தொடர்கிறது; நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும்” என்று பேசினார்.
உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “துறைசார்ந்த பிரச்னைகளை முதல்வரிடம் பேசி தீர்வு காணுங்கள்; உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் நேர்மறையான பதிலை வழங்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.