செய்தியாளர்: வி.சார்லஸ்
சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது ஆண் பயணி ஒருவர் தனது உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது சோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து ரூ.70 லட்சத்து 71 ஆயிரத்து 480 ரூபாய் மதிப்புள்ள 780 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.