தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை 16.02 லட்சம் பேர் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். இறுதி பட்டியல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியிடப்படும்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு நீடிக்கப்பட்ட கால அவகாசம் நாளை வெள்ளிக்கிழமை உடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கவும், புதியவாக்காளர்களை இணைக்கவும் தேர்தல்ஆணையம் மீண்டும் ஒரு வாய்ப்பைஅளித்தது.
இதற்கான கால அவகாசம்நாளையுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை 16 லட்சத்து 2 ஆயிரத்து 555 பேர் தங்களது பெயரைச் சேர்க்க மனுஅளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிவாக்காளர் பட்டியல் அடுத்தமாதம் 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது.