5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள்.. தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை!
தலைமை தேர்தல் ஆணையம், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. டெல்லியில் நடைபெறவுள்ள ஆலோசனையில் மாநில தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் உள்துறை செயலாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். தவறினால், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் தீவிர காட்டி வருகிறது. அதன்படி, ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.
டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க மாநில தேர்தல் பார்வையாளர்கள், 5 மாநில உள்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்துகொள்ள தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
சட்டமன்றதேர்தலுக்கான ஏற்பாடுகளை பார்வையிட தேர்தல் ஆணையக் குழுவினர் விரைவில் தமிழகம், புதுச்சேரிக்கு விரைவில் வருவார்கள் என தகவல் வெளியாகிவுள்ளது.

