2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. ஃபெஞ்சல் புயல் நிவாரணம், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தம்.
அமலாக்கத்துறை சோதனைக்கும், தமது டெல்லி பயணத்துக்கும் சம்பந்தமில்லை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச்செயலாளராக பெ.சண்முகம் தேர்வு திமுக வெளிச்சத்தில் தங்கள் கட்சி இல்லை என பேட்டி.
திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்.
திமுகவுக்கும், தோழமை கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி. கூட்டணி வலுவாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி.
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. 14, 15 ஆம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு. ஆன்லைன் முன்பதிவு நாளை தொடக்கம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. சிறப்பு புலனாய்வுக்குழுவின் பரிந்துரையின்படி நடவடிக்கை என காவல் துறை தகவல்.
அம்பேத்கர் விருது அறிவித்ததற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விசிக எம்.பி ரவிக்குமார் நன்றி. விருதை திருமாவளவனுக்கு சமர்பிப்பதாக நிகழ்ச்சி.
பிப்ரவரி மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி. ரபேல் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கான 10 பில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல்.
மணிப்பூர் ஆயுத குழுக்கள் ஸ்டார்லிங் இணைய சேவையை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதை திட்டவட்டமான மறுத்துள்ளது ஸ்டார்லிங் நிறுவனம். இந்தியாவில் தங்கள் இணைய சேவை வேலை செய்யாது என விளக்கம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேற்றம். சிட்னி போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது இந்திய அணி.
மதகஜராஜா பட முன்னோட்ட நிகழ்ச்சியில் உடல் நடுக்கத்துடன் பேசிய விஷாலை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி. அதீத காய்ச்சலுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல்.
பிரபல மலையாள நடிகை ஹனிரோசுக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு. தனது உடல்வாகை அருவருக்கத்தக்க விதமாக விமர்சித்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஹனிரோஸ்.
கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும். சிந்துவெளி பண்பாட்டு நூற்றாண்டு விழா கருத்தரங்கில் முதலமைச்சர் அறிவிப்பு.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு நிற துப்பட்டாக்களுக்கு அனுமதி மறுப்பு. கருப்பு நிற துப்பட்டாக்களை வாங்கி வைத்த பிறகே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி.
பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் இருந்ததால் கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர். இனி இதுபோன்று நடக்காமல் இருக்க காவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கம்.
6 பேர் உயிரிழப்புக்கு காரணமான சாத்தூர் பட்டாசு வெடி விபத்து வழக்கில், ஆலையின் உரிமையாளர் கைது. போர்மேன் மற்றும் ஆலை மேற்பார்வையாளரையும் கைது செய்து காவல் துறை விசாரணை.
ஞாயிறு விடுமுறையையொட்டி சபரிமலையில் கூட்டம் அலைமோதியது. ஒரு நிமிடத்திற்கு 80க்கும் மேற்பட்டோர் 18 ஆம் படி ஏறி தரிசனம்.
ஒடிசாவில் பட்டியலினத்தை சேர்ந்த இருவர் மீது கிராம மக்கள் தாக்குதல். ஆடு திருடியதாக கூறி செருப்பு மாலை அணிவித்து சித்திரவதை செய்த கொடூரம்.