தங்கத்தின் விலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

ரூ. 65 ஆயிரம் நோக்கி கிடு கிடு உயர்வு.. தொடர்ந்து ஏறும் தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 64 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் 64 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் முதலீடு பெரும்பாலும் தங்கத்திலேயே இருக்கிறது. இதனால், என்னதான் தங்கத்தின் விலை ஏறினாலும் மக்கள் தங்கம் வாங்குவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

மேலும், அமெரிக்க அதிபராக டொனால்ட் டரம்ப் பொறுப்பேற்றதிலிருந்தே இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதன் பாதிப்பு தங்கத்தின் விலையிலும் காண முடிகிறது.

Gold Rate Chennai

இதன்படி, இன்று ( 19 பிப்ரவரி) சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ 64, 280 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.8035 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை தொடர்ந்து எந்த மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கு ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1, 08, 000 க்கும் விற்பனையாகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு உள்ளாக ரூ 14 ஆயிரம் வரை விலை உயர்வு ஏற்பட்டு, தற்போது ரூ. 65 ஆயிரம் நோக்கி பயணம் செய்கிறது.