பர்வேஸ் அகமது புதிய தலைமுறை
தமிழ்நாடு

அமைச்சர் பர்வேஸ் விளக்கம்.. கர்ஜித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. முறைத்துப் பார்த்த முதல்வர் விஜய்!

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மோனியா வாயு விவகாரம் தொடர்பாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பர்வேஸ் அகமது பேசினார்.

Prakash J

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மோனியா வாயு விவகாரம் தொடர்பாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பர்வேஸ் அகமது பேசினார். அதைக் கேட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் கர்ஜித்தனர். அப்போது அவர்களைப் பார்த்து சபாநாயகர் அமைதியாய் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் இதுகுறித்த செய்திகளை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.