தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 149 இடங்களிலும், அதிமுக கூட்டணி 84 இடங்களில், மநீம ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் வடக்கு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள முன்னிலை நிலவரம்.
கடலூர் மாவட்டம் (திமுக 2 - அதிமுக 4)
இந்த மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி, கடலூர் பகுதிகளில் திமுகவும், விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸும், நெய்வேலி தொகுதியில் பாமகவும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் (திமுக 3 - அதிமுக 2)
வானூர், விழுப்புரம், திண்டிவனம் தொகுதிகளில் அதிமுகவும், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், செஞ்சி தொகுதிகளில் திமுகவும், மயிலம் தொகுதியில் பாமகவும் முன்னிலை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் (திமுக 3 - அதிமுக 1)
கள்ளக்குறிச்சியில் அதிமுக மற்றும் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதியில் திமுகவும் முன்னிலை.
திருவண்ணாமலை மாவட்டம் (திமுக 5 - அதிமுக 3)
செய்யாறு, போளூர், ஆரணி தொகுதிகளில் அதிமுகவும். வந்தவாசி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய ஐந்து தொகுதிகளில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது.
தருமபுரி மாவட்டம் (அதிமுக 3 - பாமக 2)
பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளில் அதிமுகவும், பென்னாகரம் மற்றும் தருமபுரியில் பாமகவும் முன்னிலை வகிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் (திமுக 2 - அதிமுக 3)
ஊத்தங்கரை , கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் அதிகமுகவும். பர்கூர் மற்றும் ஓசூரில் திமுகவும். தளி தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் (திமுக 2 - அதிமுக 2)
வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் அதிமுகவும், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது.
வேலூர் மாவட்டம் (திமுக 3 - அதிமுக 2)
அணைக்கட்டு, வேலூர் மற்றும் குடியாத்தத்தில் திமுக முன்னிலை. கே.வி.குப்பம் மற்றும் காட்பாடி தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் (திமுக 2 - அதிமுக 1)
ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதியில் திமுகவும். சோளிங்கரில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது. அரக்கோணத்தில் அதிமுக முன்னிலை.