பாலியல் துன்புறுத்தலை தடுக்க சிறப்பு சட்டம்?  முகநூல்
தமிழ்நாடு

பாலியல் துன்புறுத்தலை தடுக்க சிறப்பு சட்டம்? நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்னதென்ன?

பாலியல் துன்புறுத்தலை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

PT WEB

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஜாமீன் கோரி உடற்கல்வி ஆசிரியர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மாணவிகள், விளையாட்டு வீராங்கனைகளை பாதுகாத்தல், பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், பாலியல் குற்றங்கள் மீது எடுக்கப்பட வேண்டிய தண்டனை நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், பெண்கள் நலன் கருதி இதுபோன்ற சட்டம் கொண்டு வர முயற்சித்த அரசுக்கு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டார். சட்டம் இயற்றப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்தார்.