மகளிர் உரிமைத்தொகை திட்டம் முகநூல்
தமிழ்நாடு

தகுதியில்லா பயனர்கள்?.. மகளிர் உரிமைத்தொகை வாங்குவோரின் கவனத்திற்கு.. தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

PT WEB

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில், “பெண்களின் வருமானச் சான்று தரவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருமானம் உயர்ந்திருந்தால், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

பயனாளர்களின் இறப்பு, வருவாய் நிலவரம், நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் பதிவு, பத்திரப்பதிவு உள்ளிட்ட தரவுகளை மாதந்தோறும் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

பயனாளர்களின் பொது விநியோக திட்ட தரவுகள், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உரிமை தொடர்பான தகவல் தளங்களை காலாண்டு அடிப்படையில் ஆய்வு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயனாளர்கள் தொழில் வரி செலுத்தப்பட்ட தரவுகள் மற்றும் மின்சாரம் பயன்பாட்டு தரவுகளையும் அரையாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து வரி செலுத்திய விவரங்கள், வருமானவரி செலுத்தப்பட்டதற்கான தரவுகளை ஆண்டுதோறும் சரிபார்க்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேல்முறையீடு செய்ய விரும்பினால் நிராகரிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்கலாம் “ என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.