
ஆயுதபூஜை பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு சார்பில் ஒருபுறம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றுன. அதேபோல் ஆம்னி பேருந்துகளில் சென்னை மற்றும் பல இடங்களிலிருந்தும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். பண்டிகை தினத்தையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.