செய்தியாளர்: சுரேஷ்குமார்
திருப்பூர் கோர்ட் வீதி ரயில்வே சுரங்க பாலத்தின் வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் நிறுவன வேனின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்த நபர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (25) என்பதும் இவர் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வடக்கு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.; இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.