செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு துர்கையம்மன் ஆலய பூங்கரக திருவிழா நேற்று நடைபெற்றது, முன்னதாக கோயில் உள்ள துர்கையம்மனுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்றது,
அதனை தொடர்ந்து கனமழை பெய்த நிலையில் மழையிலும் துர்கையம்மன் பூங்கரக வடிவில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது பக்தர்கள் பக்தி பரசவத்துடன் அம்மனை வழிபட்டனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற பூங்கரகத்தின் மீது உப்பு, மிளகு தூவி, வழிப்பட்டனர், இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.