செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்துவந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வது முற்றிலுமாக குறைந்து அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம், திசையன்விளை சாலையில் அதிகரித்து காணப்படும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்று வருகின்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள சாலைகள், விளைநிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ள பனிமூட்டத்தால் விவசாய பணிகளுக்கு செல்வோர் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டமும் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது