கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி pt desk
தமிழ்நாடு

திருவாரூர் | கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி - 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் பலி

திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்த விபத்தில், சாலையோரம் சென்று கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் மாவட்டம் பேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட காரைக்கால் இடையே புதிதாக அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்ற வருகிறது.. இதற்காக கரூரில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கோவில்திருமாளம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற லாரி வளைவில் வேகமாக திரும்பியுள்ளது.

Death

அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையோரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (35), அவரது இரண்டு குழந்தைகளான நிரோஷன் (7), வியாஸினி (4) உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் விக்னேஷ் தப்பியோடிய நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.