அரசு பேருந்தின் அவலம் pt desk
தமிழ்நாடு

திருவண்ணாமலை: அரசு பேருந்தின் அவலம்... மழையில் நனைந்தபடி பயணம் செய்த பயணிகள்!

செங்கம் நகர்ப்புற பேருந்தில் பயணிகள் நனைந்தபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PT WEB

செய்தியாளர்: மகேஷ்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர்ப்புற பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் மழைக் காலங்களில் பேருந்தில் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்யும் அவல நிலையில் தொடர் கதையாக உள்ளது.

மழைக் காலங்களில் நகர்ப்புற பேருந்துகளின் மேற்கூரை ஒழுகுவதாக பயணிகள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் செங்கம் பனிமலை ஊழியர்கள் மெத்தன போக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு பேருந்தின் அவலம்

மேலும், சில நகப்புற பேருந்துகளில் பணியில் இருக்கும் ஓட்டுனர்களுக்கு பதிலாக ஒப்பந்த ஓட்டுநர்கள் பேருந்தை இயக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்ததுள்ள பேருந்துகளை மறு சீரமைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.