தங்கும் விடுதி pt desk
தமிழ்நாடு

திருவண்ணாமலை: தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்ம மரணம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மா.மகேஷ்.

ஆன்மிக நகரமான திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடுமுறை தினங்களிலும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசித்துவிட்டு 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் பாதையில், கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்ம மரணம்

நேற்றிரவு அருணாசலேஸ்வரர் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள டிவைன் ஃபார்ம் ஹவுஸ் ஸ்டே என்ற தனியார் தங்கும் விடுதியில், சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மகாகாலவியாசர், அவரது மனைவி ருக்மணி பிரியா, மகள் ஜலந்தரி, மகன் ஆகாஷ்குமார் ஆகிய நான்கு பேரும் தங்கியிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை விடுதியின் உரிமையாளர் கௌதம் என்பவர் அவர்கள் தங்கியிருந்த அறையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது நான்கு பேரும் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.