சூரசம்ஹார விழா pt desk
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் லீலையானது ஆண்டுக்கு இருமுறை நடைபெறும், ஐப்பசி மாதம் சஷ்டி விரதத்தின் போதும், பங்குனி பெருவிழாவை முன்னிட்டும் இரண்டு முறை சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழா, 15 நாட்கள் நடைபெறும். இதில் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதனை தொடர்ந்து., 10 ஆம் நாளான நேற்று சுரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18-ம் தேதி சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் வைபோகமும்., உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.