நம்பிக்கையில்லா தீர்மானம் முகநூல்
தமிழ்நாடு
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இன்று நடைபெறுகிறது வாக்கெடுப்பு!
அதன்படி, சட்டப்பேரவையில் இன்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது.
பேரவையில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமாரும், பேச முயன்றனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பேச அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவு, திங்களன்று பேச அனுமதிப்பதாகக் கூறினார்.
இதனால், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததோடு, சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவை செயலாளரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் வழங்கினர். அதன்படி, சட்டப்பேரவையில் இன்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. துணை சபாநாயகர் பிச்சாண்டியோ அல்லது மாற்று தலைவர்களோ சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவார்கள்.