பாஜக தமிழிசை சௌந்தரராஜன் முகநூல்
தமிழ்நாடு

’திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டது’- பாஜக தமிழிசை சௌந்தரராஜன்!

இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலுவாக இல்லை என்பதையே இது காட்டுவதாகவும், திருமாவளவனின் உண்மையான நிறம் தெரியவரும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.

PT WEB

விசிக தலைவர் திருமாவளவனின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டு விட்டதாகவும், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காவிட்டாலும் அவரது மனசாட்சி இங்கே தான் இருக்கிறது என ஆதவ் அர்ஜூனா பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பாத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பக்கம், மற்றொரு பாத்திரம் விஜய் பக்கம் என திருமாவளவனின் டபுள் ஆக்சன் வெளிப்பட்டுவிட்டதாக தமிழிசை விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் வலுவாக இல்லை என்பதையே இது காட்டுவதாகவும், திருமாவளவனின் உண்மையான நிறம் தெரியவரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.