செய்தியாளர்: திருக்குமார்
தேனி மாவட்டம் போடி அருகே பாலார்பட்டி கிராம மக்கள் தை திருநாளை, முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் பிறந்த நாள் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தை திருநாளான இன்று, ஜான் பென்னி குவிக்-ன் 184-வது பிறந்தநாளை முன்னிட்டு பாலார்பட்டி கிராமத்தினர் இசை வாத்தியங்களுடன் சிலம்பாட்டம், தேவராட்டம் ஆடி மகிழ்ந்தனர். இதையடுத்து ஜான் பென்னி குவிக்கின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியபடி ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பொங்கல் பானைகளுடன் கிராமம் மக்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
இவர்களோடு மலேசியாவில் வாழும் தமிழ் பெண்கள் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக இந்த ;கிராமத்திற்கு வந்திருந்தனர். இதனால் அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டுள்ளது.