சாலை விபத்து pt desk
தமிழ்நாடு

தேனி: காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து - இரு ஐயப்ப பக்தர்கள் உயிரிழப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பக்தர்கள் வந்த காரும் மினி லாரியும் மோதிய விபத்தில் இரண்டு ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: J.அருளானந்தம்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே திண்டுக்கல் சாலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் சென்று விட்டுத் திரும்பிய தெலங்கானா மாநில காரும், தேனி நோக்கிச் சென்ற மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்து

மேலும் இருவர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சுயநினைவு இல்லாத நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.