தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசத்தில், பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில், வரும் 14 ஆம் தேதி வரை படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவ்விரண்டு மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர்பட்டியல், வரும் 19ஆம் தேதிவெளியாகும் என அறிவித்துள்ளது.
அதேபோல், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், அந்தமான்ம ற்றும் நிக்கோபாரிலும், படிவங்களை வழங்க சமர்பிப்பதற்கான காலக்கெடு வரும் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசமாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்து சமர்பிப்பதற்காக காலக்கெடு, டிசம்பர் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மற்றொரு அறிவிப்பில் தேர்தல்ஆணையம், எஸ்.ஐ.ஆர் படிவங்களை விநியோகிக்கும் பணி தமிழ்நாட்டில் நூறு சதவீதம் நிறைவடைந்துவிட்டதாகவும், இதுவரை சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியும் நூறுசதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.