எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்web
இந்தியா
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக மக்களவையில் இன்று சிறப்பு விவாதம்!
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விவாதத்தை தொடங்கி வைக்கிறார். 10 மணி நேரம் இவ்விவாதம் நடைபெறும் என்றும், இதற்கான பதிலை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் நாளை அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவாதம்
இந்த விவாதத்தின் போது எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உயிரிழப்பு, வாக்குத் திருட்டு விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள்தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

